யாழில் கண­வன் வேறு­ தி­ரு­ம­ணம்!! இரண்டு பிள்ளைகளின் தாய் கைது....

4 கிலோ 65 கிராம் கஞ்­சா­வைக் கடத்­தி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் ஆழி­ய­வ­ளை­யைச் சேர்ந்த குடும்­பப் பெண் ஒரு­வ­ரைப் பொலி­ஸார் கைது ­செய்­த­னர்.

பளை இயக்­கச்­சிச் சந்­தி­யில் வைத்து அவர் கைது செய்­யப்­பட்­டார். வட­ம­ராட்சி கிழக்கு ஆழி­ய­வ­ளை­யி­லி­ருந்து அவர் திரு­கோ­ண­ம­லைக்கு கஞ்­சா­வைக் கடத்­திச் சென்­று­கொண்­டி­ருந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவர் இத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்­து ­வ­ரு­கி­றார் என்­றும் பொலி­ஸார் கூறி­னர்.

கைதா­கி­யி­ருக்­கும் பெண்­ணுக்கு 2 பிள்­ளை­கள் உள்­ள­னர். கண­வன் வேறு­ தி­ரு­ம­ணம் செய்­துள்­ளார். குறித்த பெண்ணே குடும்­பத்­தைக் கொண்டு நடத்­து­கி­றார்.

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளுக்­கான பிர­திப் பொலிஸ் மா அதி­ப­ரின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள உட­னடி முறி­ய­டிப்­புப் பிரி­வின் பொறுப்­ப­தி­காரி உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் க.ஜெயந்­தன் தலை­மை­யி­லான குழு­வி­னரே பெண்­ணைக் கைது செய்து கடத்­தலை முறி­ய­டித்­த­னர்.

குழு­வில் குல­தீ­பன், பந்­துல, கும­ணன் ஆகி­யோ­ரும் இணைந்­தி­ருந்­த­னர்.விசா­ரணை மற்­றும் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்­கா­கக் கஞ்­சா­வு­டன் அவர் பளைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் கூறி­னர்.