யாழ் போதனா வைத்திய சாலையில் பெண் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்

இரண்டு நாள் காய்ச்சல் காரணமாக பிறந்து 21 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளது.

இளவாலை வடலியடைப்பை சேர்ந்த சுமன் அபிசா என்ற 21 நாளுடைய பெண் குழந்தையே மேற்படி உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் குழந்தைக்கு கடந்த 21 ஆம் திகதி இரவு காய்ச்சல் இருந்துள்ளது.

அப்போது தாய் ஈரத்துணியால் தடவி விட்டு பால் கொடுத்துள்ளார்.

பின்னர் 22 ஆம் திகதியும் அதிகாலை காய்ச்சல் இருந்த போது முதலுதவி அளித்துள்ளார்கள்.

அன்றைய தினம் மாலை தனியார் வைத்தியசாலையில் குழந்தைக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

பின்னர் 23 ஆம் திகதி அதிகாலை பால் கொடுப்பதற்கு தாய் குழந்தையை எழுப்பிய போது குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது.

உடனடியாக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வந்த போது குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணையை யாழ் போதனா வைத்திய மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.