பேஸ்புக் கலவரம்: கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி பேஸ்புக் பக்கத்தால் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த எட்டு பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, போலியான பேஸ்புக் பக்கமொன்றை ஆரம்பித்து அவரை விமர்சித்ததை அடுத்தே மோதல் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.