வாக்கினை காக்க சிலாபம் சென்ற நீதிபதி இளஞ்செழியன்

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளஞ்செழியன், மெய்பாதுகாவலர் ஹேமசந்திரவின் தர்ம தான நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இவர் நேற்றைய தினம் பங்கேற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 12 வருடங்கள் கடமையாற்றிய மெய்பாதுகாவலர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம் இளஞ்செழியன், உயிரிழந்த மெய்பாதுகாவலரின் பிளைகளுக்கான கல்வி செலவீனங்களை தாமே பொறுப்பேற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இளஞ்செழியன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதுடன், நேற்றைய தினம் இடம்பெற்ற தர்ம தான நிகழ்விலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.