நீண்டகாலம் அரசாங்கம் பயணிக்கவே முடியாது : மஹிந்த

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­ர­மான முறையில் அதனைத் திணிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது.

எனினும் தேரர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு செவி­சாய்க்­காத அர­சாங்­கத்தால் நீண்ட காலத்­திற்கு பய­ணிக்க முடி­யா­தென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மறைந்த பேரா­சி­ரியர் நாகொட அம­ர­வங்ச தேரரின் பூத­வு­ட­லுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மரு­தா­னை­யி­லுள்ள வித்­யா­லீய விகா­ரைக்கு நேற்று சென்­றி­ருந்தார்.

ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேர்தல் நடத்தும் திகதி பற்றி அமைச்­சர்கள் ஒவ்­வொ­ரு­வரும் வெவ்­வேறு திக­தி­களைக் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் அர­சாங்கம் தேர்­தலை எப்­போது நடத்­தி­னாலும் அதனை எதிர்­கொள்­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம்.

அத்­துடன் நாம் தேர்­தலில் பாரிய வெற்­றி­ய­டைவோம். மேலும் தேர்­தலில் தோல்­வியைத் தழு­வ­வேண்டி வரும் என்­கின்ற அச்சம் அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. அத­னா­லேயே தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்தி வரு­கி­றது. மேலும் அர­சாங்கம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு எத்­த­ணித்­துள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து அவ­தா­ன­மாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு கத்­தோ­லிக்க சங்­கமும் தெரி­வித்­துள்­ளது. நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­து­வ­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அதி­காரப் பகிர்­விற்கு முயற்­சிப்­ப­தாக அர­சாங்­கங்கம் தெரி­விக்­கி­றது. எனினும் அதி­காரப் பகிர்வு குறித்து சகல தரப்­பிலும் தற்­போது எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.எனவே அர­சாங்கம் பலாத்­கா­ர­மான முறையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வருவதன் மூலம் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுமா? என்கின்ற சந்தேகம் உள்ளது. மேலும் தேரர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காத அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு பயணிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.