பிரித்தானிய பிரஜை கைது

கொழும்பு - கோட்டை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருந்து 3 கிலோ 370 கிராம் வல்லப்பட்டைகளுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதான பிரித்தானியப் பிரஜை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.