பொக்கணையில் தேடுதல் தீவிரம்

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை பாடசாலைக்கு முன்பாக விடுதலை புலிகளால் ஆயதங்கள் புதைக்கப்பட்டிருக்காலம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதமன்றின் அனுமதியுடன் கனரக வாகனத்தை பயன்படுத்தி விஷேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அம்பலவன் பொக்கனை இறுதிக்கட்ட யுத்தததால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகும்.

இந்த நிலையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பாதுகாப்பான பகுதி என தெரிவித்து கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.