காலிமுகத்திடலில் தவறான நடத்தையில் ஈடுபட்ட மனைவி!! கவணவரின் அதிரடி

தவறான நடத்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மனைவியை, கணவன் பொது மக்கள் முன்லையில் அம்பலப்படுத்திய சம்பவம் ஒன்று, கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது.

காலி மாவட்டத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தயாரான இளம் குடும்பப் பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் காலிமுகத்திடலில் உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தனது நண்பர்களுடன் காலிமுகத்திடலுக்குச் சென்ற கணவர் மனைவியை தலை முடியில் பிடித்து உதைத்தார்.

கீழே விழுந்த மனைவி, தனது கணவன்தான், உதைத்தது என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது தவித்தார். அந்தவேளை அவருடன் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன், தப்பி ஓடினார்.

கணவன் காலிமுகத்திடலுக்கு வருவார் என சற்றும் எதிர்பார்த்திராத மனைவி, கணவன் தாக்கிய பின்னர் எழுந்து வேறு திசை நோக்கிச் செல்ல முற்பட்டார்.

ஆனால், அவரை மடிக்கிப் பிடித்த கணவன், அவர் மீது சரமாரியாக தாக்கினார். அங்கு நின்றவர்களிடம், தனது மனைவியின் தவறான நடத்தை பற்றியும் எடுத்துக் கூறினார்.

இனிமேல் நீ வீட்டுக்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்து விட்டு அவர் தனது நண்பர்களுடன் திரும்பிச் சென்றுவிட்டார்.

திரும்பிச் சென்ற கணவன், பின்னர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த மனைவிக்கு அருகில் சென்று, அழுது புலம்பியவாறு 'ஏன் நீ இப்படி இரண்டு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு இன்னுமொரு இளைஞனுடன் தவறான நடத்தைக்குச் சென்றாய்' எனக் கேட்டு தலையில் அடித்துப் புலம்பினார்.

பின்னர் நண்பர்கள் அவரை அழைத்துச் சென்றனர். அதேவேளை தப்பிய ஓடிய இளைஞனை மடிக்கிப்பிடித்த அங்கிருந்த சிலர், அவரை நையப்புடைத்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து வாகனம் ஒன்றில் ஏறிச் சென்றதாக சமபவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.

குறித்த இளம் பெண் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர் எனவும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவருடன் நீண்டகாலமாக காதல் எற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.