கிளிநொச்சியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! மரணத்தில் பலத்த சந்தேகம்

கிளிநொச்சி மாவட்டம் பிரமனந்தனாறு குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்திரலிங்கம் சந்திரகுமார் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.