யாழ். தனியார் வைத்தியசாலையொன்றில் நோயாளரிற்கு காத்திருந்த ஆபத்து

யாழ். தனியார் வைத்தியசாலையொன்றில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து நோயாளர்கள் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தவறான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமையே தொற்று ஏற்பட காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த சனிக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று இவர்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டதுடன், கண்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த தனியார் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணம் வைத்திய நிபுணர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகியிடம் விளக்கம் கோரிய போதிலும் அதற்கு உரிய பதில் கிட்டவில்லை என நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.