தங்கப்பதக்கம் வென்ற கிரான் மத்திய கல்லூரி அணியினருக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கை கபடி சம்மேளனத்தினால் பாடசாலை அணிகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடி போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற கிரான் மத்திய கல்லூரி அணியினருக்கு ஏறாவூரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஏறாவூரில் இருந்து வாகன பவனியாக கிரானிற்கு அழைத்து வரப்பட்ட இவர்களிற்கு வீதியோத்திரத்தில் காத்திருந்த மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவ் நிகழ்வினை கிரான் கருணா ஜக்கிய விளையாட்டுக்கழகமும், கிரான் மத்திய கல்லூரி பழையமாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 21,22ஆம் திகதிகளில் எம்பிலிப்பிட்டிய பாடசாலை மைதானத்தில் 16 வயதுப்பிரிவு ஆண்கள் அணியினருக்காக நடத்தப்பட்ட இத்தொடரின் இறுதிபோட்டியில், கொறண தட்சிலா மகா வித்தியாலய அணியினரை 11-38 எனும் புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கிரான் மத்திய கல்லூரி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.