தேரர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

உரிய அனுமதியின்றி குட்டி யானை ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இவ்விவகாரம் உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரட்ன முன்னிலைக்கு வந்தபோது, முதலாவது சாட்சியாகக் குறிப்பிடப்பட்ட விவசாய மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் வசந்த சேனநாயக்க சமுகமளித்திருக்கவில்லை.

எனினும், அவருக்குப் பதிலாக அவரது ஆலோசகர்கள் ஆஜராகியிருந்தனர். இதையடுத்தே இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.