கொழும்பு புறக்கோட்டையில் பழங்கள் வாங்குவோரின் கவனத்திற்கு

கடந்த தினத்தில் நுகர்வுக்கு தகுதியற்ற பழங்கள் மிண்டும் சுத்தம் செய்யப்பட்டு புறக்கோட்டை சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் வௌிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் புறக்கோட்டை 5ம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

இதன்போது , குறித்த இடத்தில் நுகர்வுக்கு தகுதியற்ற தோடம் பழங்கள் மீண்டும் சுத்தப்படுத்தப்படுவதை அவதானிக்க கூடியதாய் இருந்தது.

குறித்த இடத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது , பழங்களை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனமொன்றினால் இவை தமக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி , குறித்த பழங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்திற்கு சென்று அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.