விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிய படைத்தரப்பு; கடைசியில் கிடைத்தது என்ன?

இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மறைத்து வைத்தார்கள் என்று சந்தேகித்த இடத்தில் இன்றைய தினம் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படைத்துறைக்கு அங்கிருந்துமண்ணைத் தவிர எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

புதுக்குடியிருப்பு அம்பலவன்பொக்கணைப் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த அகழ்வுப் பணியின்போது எதுவும் மீட்கப்படாததால் குறித்த அகழ்வுப் பணி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடிய படைத்தரப்பு; கடைசியில் கிடைத்தது என்ன?

இதுகுறித்த அறிவிப்பினை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

இதுதவிர வேறு சில இடங்களிலும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அங்கேயும் இதுபோன்ற அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.