மகாநாயக்கர்களுடன் ததேகூ விரைவில் சந்திப்பு

புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மகாநாயக்கர்களுடன் கலந்துரையாட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, கூடிய விரைவில் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, கூட்டமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நேற்றைய கலந்துரையாடலின் போது முடிவு செய்துள்ளனர்.

மேலும், மகாநாயக்கர்கள் கூறிய கருத்து தொடர்பில் அரசாங்கத்தின் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருவதாக, இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளவே, கூட்டமைப்பு மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.