வேள்­வி­க­ளுக்கு நிரந்­த­ரத் தடை!

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்ற நியா­யா­திக்க எல்­லைக்­குள் அமைந்­துள்ள இந்து ஆல­யங்­க­ளில் மிருக பலி­யி­டல் வேள்வி நடத்­து­வ­தற்கு யாழ்ப்­பாண மேல் நீதி­மன்று நிரந்­த­ரத் தடை­வி­தித்­தது.

இந்து ஆல­யங்­க­ளில் பலி­யி­டல் பூசை வழி­பா­டு­களை நடத்­து­வ­தற்கு இறைச்­சிக்­க­டைச் சட்­டத்­தின் கீழ் உள்­ளூ­ராட்சி சபை­கள் அனு­மதி வழங்கி வந்­தமை அதி­கார முறை­கேடு என்­றும் நீதி­பதி தனது தீர்ப்­பில் சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளார்.

ஆல­யங்­க­ளில் இறைச்­சிக் கடைச் சட்­டங்­க­ளின் கீழ் மிரு­கங்­கள் பலி­யி­டப்­ப­டு­வ­தைத் தடை­செய்­யக் கோரி ைசவ மகா சபை யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நீதிப் பேராணை மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­த­து.

மனு மீதான விசா­ர­ணை­கள் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் 2016 ஆம்­ஆண்டு ஏப்ரல் மாதம் முத­லாம் திகதி முதல் நடை­பெற்று வந்­தது. வேள்­விக்கு இடைக்­கா­லத் தடை­யும் விதிக்­கப்­பட்­டது.

மிருக பலி­யி­டலை நடத்­தும் ஆலய நிர்­வா­கி­ களை எதிர் மனு­தா­ரர்­க­ளா­கக் கொள்­ளா­மல், பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர், சுகா­தார வைத்­திய அதி­காரி, பிர­தேச சபை என்­ப­வற்­றுக்கு எதி­ரா­கவே இந்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எனி­னும் வேள்வி பூசை நடத்­தும் கவு­ணா­வத்தை நர­சிம்­மர் ஆலய நிர்­வா­கத்­தி­ னர் தம்­மை­யும் வழக்­கில் ஒரு தரப்­பி­ன­ரா­கச் சேர்க்­கு­மாறு இடை­யீட்டு மனு ஒன்­றைத் தாக்­கல் செய்து தமது தரப்பு வாதங்­களை முன்­வைத்­த­னர்.

கவு­ணா­வத்தை நர­சிம்­மர் ஆல­யத்­தில் வேள்வி நடத்­தப்­ப­டு­வது, இறைச்சி க்கடைச் சட்­டத்­தின் பிர­கா­ர­மும், மத­வு­ரி­மைச் சட்­டத்­தின் பிர­கா­ர­மும், மிருக பலி சட்­டத்­தின் பிர­கா­ர­மும் அத்து மீறிய செயற்­பாடு என்று மனு­தா­ரர்­கள் தமது வாதங்­களை முன்­வைத்­த­னர்.

300 வரு­டங்­க­ளுக்கு மேலாக, மர­பு­மு­றை­யாக இந்த வழி­பாட்டு முறை நடை­பெற்று வரு­கின்­றது. இத­னைத் தடை செய்­யக் கோரு­வது, எமது மத வழி­பாட்டு உரி­மை­யில் தலை­யீடு செய்­யும் செயற்­பாடு என்று எதிர்த்­த­ரப்­பி­னர் வாதங்­களை முன்­வைத்­த­னர்.

ஆனால், ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் கூடும் இடத்­தில் நூற்­றுக்­க­ணக்◌­கான மிரு­கங்­க­ளைப் பலி­யி­டு­வது மிருக வதைச் செயற்­பாடு என்­று­கூறி அவர்­க­ளின் வாதங்­களை ஏற்க நீதி­மன்று மறுத்­து­விட்­டது.

‘‘சமய விழாக்­க­ளுக்கு அனு­மதி வழங்­கும் போது, இறைச்­சிக்­க­டைச் சட்­டத்­தின் கீழ் அனு­மதி வழங்­கக்­கூ­டாது. சமய விழாக்­கள் சட்­டத்­தின் கீழேயே அனு­மதி வழங்­க­வேண்­டும்’’ என்­றும் நீதி­பதி தனது தீர்ப்­பில் தெரி­வித்­தார்.

‘‘யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நியா­யா­திக்­கத்­துக்கு உட்­பட்ட இந்து ஆல­யங்­க­ளில் பூஜை­க­ளின் போதோ வேறு சந்­தர்ப்­பங்­க­ளிலோ மிரு­கங்­க­ளைப் பலி­யி­டக் கூடாது என்று மன்று தடை விதிக்­கின்­றது. அதற்கு எந்த உள்­ளூ­ராட்சி சபை­க­ளும், நீதி­வான் நீதி­மன்­றங்­க­ளும் அனு­மதி வழங்­கக்­கூ­டாது. அத­னை­யும் மீறி எவ­ரே­னும் மிருக பலி­யி­டலை மேற்­கொண்­டால் அது தொடர்­பில் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­ய­மு­டி­யும். முறைப்­பாட்­டின் பிர­கா­ரம் குற்­ற­மி­ழைத்­த­வர் உட­ன­டி­யா­கக் கைது செய்­யப்­பட்டு நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்’’ என்று தீர்ப்­ப­ளித்­தார்.

இந்­தத் தடை­யுத்­த­ரவை வட­மா­காண உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் அமைச்­ச­ராக உள்­ள­மை­யி­னால் முத­ல­மைச்­ச­ருக்­கும், வடக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ருக்­கும், மல்­லா­கம் நீதி­வான் மன்­றுக்­கும் அனுப்பி வைக்­கு­மாறு மேல் நீதி­மன்ற பதி­வா­ள­ருக்கு நீதி­பதி பணித்­தார்.