நாளை பணி­ப­கிஷ்­க­ரிப்புக்கு தயா­ராகும் அரச தாதியர் சங்கம்

சம்­பள முரண்­பா­டு­களை அடிப்­ப­டை­யாக கொண்டு நாளை வியா­ழக்­கி­ழமை அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வேலை­நி­றுத்த போராட்­டத்தில் குதிப்ப தற்கு தயாராகி வருகிறது. இதன்­படி சுகா­தார அமைச்­ச­ரு­ட­னான பேச்­சு­வா­ர்த்­தையை அடுத்து இன்­றைய தினம் தீர்­மானம் அறி­விக்­கப்­படும் என அரச தாதியர் உத்­தி­யோ­கத்தர் சங்கம் தெரி­வித்­தது.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அரச தாதியர் சங்­கத்தின் ஏற்­பாட்­டாளர் சமன் ரத்­ன­பி­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

2006 ஆம் ஆண்­டுக்­கான அரச சேவை சம்­பள திருத்த சட்­டத்தில் பல்­வேறு தரப்பின் கோரிக்­கையின் பிர­காரம் திருத்தம் செய்­துள்­ள­மை­யினால் தாதி­யர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே நாளை வியா­ழக்­கி­ழமை வேலை­நி­றுத்த போராட்­டத்தில் குதிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இது தொடர்பில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். இந்த பேச்­சு­வார்த்தை சாத­க­மாக அமை­யா­விடின் உடனடியாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். ஆகவே இது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என்றார்.