குடும்­பத் தலை­வ­ருக்கு 8 வருட சிறைத் தண்­டனை!

பூந­க­ரி­யில் மாமி­யாரை வெட்­டிப் படு­கொலை செய்­த­து­டன், மனை­வியை வெட்டிக் காயப்­ப­டுத்­திய குடும்­பத் தலை­வ­ருக்கு 8 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத்­தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­தது யாழ்ப்­பாண மேல் நீதி­மன்று.

கிளி­நொச்சி மாவட்­டம் பூந­க­ரி­யில் 2011ஆம் ஆண்டு ஏப்­ரல் 5ஆம் திகதி யோக­ராசா சிவ­கலா (வயது -– 42) வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டார்.

அவ­ரது மகள் வெட்­டுக் காயங்­க­ளு­டன் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்­சை­யின் பின்­னர் உயிர் தப்­பி­னார்.

இவர்­களை வெட்­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் கணே­ச­ஐயா காந்­த­ரூ­பன், சிவ­க­லா­வின் மரு­ம­கன் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் நடந்த பூர்­வாங்க விசா­ர­ணை­யில் நடந்து கொலை எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து வழக்­கின் குற்­றப்­ப­கர்­வுப் பத்­தி­ரம் யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் சட்­டமா அதி­ப­ரால் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் விசா­ர­ணை­கள் நடை­பெற்று நேற்­றுத் வழக்­குத் தீர்க்­கப்­பட்­டது.

சிவ­க­லாவை வெட்­டிக் கொன்­ற­து­டன் அவ­ரது மக­ளான தனது மனை­வி­யை­யும் காந்­த­ரூ­பன் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­னார் என்­பது சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­தாக நீதி­பதி அறி­வித்­தார்.

கொலைக் குற்­றத்­துக்­காக 7 வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறைத்­தண்­ட­னை­யும், வெட்­டிக் காயப்­ப­டுத்­திய குற்­றத்­துக்­காக ஒரு வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னை­யும் விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தார் இரண்டு தண்­ட­னை­க­ளை­யும் ஒன்­றன் பின் ஒன்­றாக அனு­ப­விக்க வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­டார்.

இரண்டு குற்­றங்­க­ளுக்­கும், தலா 3 ஆயி­ரம் ரூபா வீதம் 6 ஆயி­ரம் ரூபா தண்­ட­மும் விதிக்­கப்­பட்­டது.

அதனை செலுத்­தத் தவ­றின் மேலும் இரண்டு மாதங்­கள் சாதா­ரண சிறைத்­தண்­டனை அனு­ப­விக்­க­வேண்­டும் என்று நீதி­பதி தீர்ப்­ப­ளித்­தார்.