இன்று பிற்பகல் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்

இடைப் பருவபெயர்ச்சி காலநிலை காரணமாக இன்று பிற்பகல் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனுடன் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுடன் மன்னார் மாவட்டத்திலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.