இரண்டு பஸ் வண்டிகள் மோதிய விபத்தில், 12 பேர் காயம்

தம்புள்ளை - குலாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

தம்புள்ளை கெக்கிராவ பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான, பஸ் வண்டி ஒன்றும் அனுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதிகளை தம்புள்ள பொலிஸார் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 12 பேரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.