மேர்­வினின் மகன் விடு­தி­க­ளுக்கு சென்­றாரா?

மேர்­வினின் மகன் விடு­தி­க­ளுக்கு சென்­றாரா?

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்­வாவின் மகன் மாலக சில்வா இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளுக்கு செல்லக் கூடாது என பிணை நிபந்­தனை விதித்­தி­ருந்த நிலையில், அதனை அவர் மீறி­னாரா என விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு (சி.சி.டி.) நேற்று உத்­தரவு பிறப்­பித்தார்.

இரவு நேரகளி­யாட்ட விடு­தி­யொன்றில் பிரித்­தா­னிய தம்­ப­தி­யி­னரை தாக்­கிய விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

இந்த விவ­காரம் தொடர்­பான வழக்கில் மாலக சில்­வா­வுக்கு பிணை வழங்கும் போது, அவர் எக்­கா­ரணம் கொண்டும் இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளுக்கு செல்லக் கூடாது என தடை விதிக்­கப்­பட்­டது. இந் நிலையில் அந்த தடை உத்­த­ரவு மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் மாலக சில்வா இரவு நேர களி­யா­டட விடு­தி­க­ளுக்கு செல்­வது தொடர்பில் தம்­மிடம் ஆதாரம் இருப்­ப­தா­கவும் பாதிக்­கப்­பட்ட பிரித்­தா­னிய தம்­ப­தி­யி­ன் சட்­டத்­த­ர­ணிகள் நேற்று நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

நீதி­மன்றின் உத்­த­ரவை மாலக சில்வா மீறி­யுள்­ளாரா என்­பது குறித்து உடன­டி­யாக விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­குமாறு கொழும்பு குற்றத் தடு ப்புப் பிரி­வுக்கு நீதிவான் லால் ரண­சிங்க பண் டார உத்தர விட்டார்.

அதன்படி இது தொடர்பான வழக்கு எதிர் வரும் வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.