சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞருக்கு அயலவர்கள் ஒன்றுகூடி நையப்புடைப்பு

சிறுமி துஷ்பிரயோகம்! இளைஞருக்கு அயலவர்கள் ஒன்றுகூடி நையப்புடைப்பு

இலங்கையின் வடமேற்கே புத்தளம் பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த சிறுமி ஒருவரை, இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமியின் மாமனார் வீட்டிற்கு வருவதைத் தெரிந்துகொண்ட குறித்த இளைஞர், அங்கிருந்து தப்புவதற்கு முயற்சித்துள்ளார்.

ஆனாலும் விரைந்து செயற்பட்ட சிறுமியின் மாமனார், குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளார். பின்னர் அயலவர்கள் ஒன்றுகூடி குறித்த இளைஞரை நையப் புடைத்துவிட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர், பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.