யாழில் மகளில் செயலால் தந்தைக்கு நெஞ்சுவலி! வெளிநாட்டில் இருந்து பறந்த சகோதரர்கள்

யாழில் மகளில் செயலால் தந்தைக்கு நெஞ்சுவலி! வெளிநாட்டில் இருந்து பறந்த சகோதரர்கள்

தனது காதலனைக் கரம் பிடிப்பதற்காக, யாழில் அரச உத்தியோகத்தராக வேலை செய்யும் யுவதி ஒருவர் நடாத்திய செயலால், யுவதியின் தந்தை, அதிர்ச்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ள நிலையில், குறித்த யுவதி, உயர்தரம் படிக்கும் போது, தனது வயது இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார்.

யுவதிக்கும் இளைஞனுக்கும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் யுவதி முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை எடுத்து சித்தியடைந்து, யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

காதலன் தொழில்நுட்பக் கல்லுாரியில் இறுதியாண்டு கற்று ஆறு மாத பயிற்சிக்காக யாழில் உள்ள ஒரு அலுவலகத்தில் சேர்ந்துள்ளார்.

குறித்த யுவதிக்கு, வீட்டில் கலியாணப் பேச்சு ஆரம்பித்துள்ள நிலையில், உயர் பதவியிலுள்ள, மாப்பிளைகளையே யுவதிக்கு திருமணம் முடித்து வைப்பதற்காக தரகர்கள் சிலரிடம் குறிப்பு கொடுத்துள்ளனர். தனது காதலனுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார் குறித்த யுவதி.

இதனை வைத்தே இளைஞனான காதலனும், அவனது நண்பர்களும் திட்டம் போட்டு பெண் அரச அலுவலரான காதலிக்கு, தமது திட்டத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

யுவதியின் வீட்டுக்கு குறிப்புடன் ஒரு தரகர், வந்து பொறியியலாளர் மாப்பிளை என கூறி இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளார்.

மிகவும் திட்டமிட்டு பொருந்தக்கூடியவாறே, ஜாதகமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருத்தம் பார்த்த யுவதியின் பெற்றோர், ஜாதகம் நல்ல பொருத்தம் என்றவுடன் இளைஞனின் வீட்டாருடன் கதைப்பதற்கு முயன்றுள்ளனர்.

இளைஞனுக்கு தந்தை இல்லை. தாயுடனும் திருமணமாகாத தங்கையுடனுமே, இளைஞன் வாழ்ந்து வந்ததுடன் யாழில் உள்ள ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலையும் செய்து வந்துள்ளார்.

குறித்த தகவல்கள் எல்லாம் மறைக்கப்பட்டு தாயாருக்குப் பதிலாக, இளைஞனின் நண்பன் ஒருவனின் தாய் தந்தையுடன் பெண் பார்க்கும் நிகழ்வு முடிவுற்றுள்ளது.

தாயார் விதவையானபடியால் பெண் பார்க்கவரவில்லை எனவும் கூறியுள்ளார்கள். நிச்சயதார்த்தம் முடிவுற்று திருமணத்துக்கு நாளும் குறித்துள்ளனர்.

இந் நிலையில் மாப்பிள்ளை குறி்த்த தகவல்கள் அனைத்தையும், யாரோ ஒருவர் பெண் வீட்டாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரித்து உண்மையை அறிந்த தந்தை திருமணத்தை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் திருமணம் நின்றால் தனக்கு அவமானம் எனத் தெரிவித்து குறித்த யுவதி, அந்த இளைஞனையே திருமணம் முடித்து வைக்கச் சொல்லி கேட்டு பிடிவாதம் பிடித்ததாக தெரியவருகின்றது.

யுவதியும் இளைஞனும் ஏற்கனவே காதலர்கள் என்பதை, தந்தை அறிந்தவுடன் நெஞ்சு வலியால் யாழ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது வெளிநாட்டில் உள்ள குறித்த யுவதியின் சகோதரர்கள், இலங்கைக்கு விரைந்து வருவதாகவும், அவர்களிடம் தனது காதல் பற்றி தெரியப்படுத்தியுள்ளதாகவும், தந்தை குணமடைந்தவுடன் அனேகமாக யுவதி, குறித்த காதலனையே திருமணம் முடிக்க சந்தர்ப்பம் இருப்பதாக மாப்பிள்ளையின் நண்பர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.