பௌத்த தேரராக மாறியுள்ள முஸ்லிம் சிறுவன்

மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில் தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜகிரிய மதின்னாகொடயைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு மதம் மாறியுள்ளார்.

அரநாயக்க மோராகம்மன ஸ்ரீ மயுரபாத ரஜமஹா விகாரையில் வைத்து ராஜகிரியே சந்தகித்தி தேரர் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு ஏப்றல் மாதம் 12 ஆம் திகதி பொரல்ல காசல் வைத்தியசாலையில் பிறந்த இவரின் தந்தை ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முஹம்மட் சுஹைர் எனவும், தாய் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த சித்திரசீமனி ஒலிவர் எனவும் தேசிய சகோதர ஊடகமொன்று தெரிவித்துள்ளது.