நீரிழிவு நோயாளர்களுக்கு தேசிய கண் சிகிச்சைப் பிரிவின் அறிவிப்பு

நீரிழிவு நோயாளிகளின் கண்பார்வையைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் இலவசமாக கண் பரிசோதனை முகாமொன்று இடம்பெறவுள்ளதாக கண் சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.

உலக நீரிழிவு நோயாளர்கள் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சிகிச்சை நடவடிக்கை விசேடமாக சாரதிகளை இலக்குவைத்து முன்னெடுக்கப்படுவதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது.

நீரிழிவு நோயினால் ஏற்படும் பார்வை இழப்பைத் தவிர்ந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் ஒரு வருடத்தில் ஒரு முறையாவது தகுதியான வைத்தியரை அணுகி நீரிழிவு நோய்க்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை கண் சிகிச்சை வைத்தியர்கள் சங்கத்தின் விசேட கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் மடுவந்தி திஸாநாயக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 80 ஆயிரம் பேர் நீரிழிவு நோயினால் கண்பார்வையை இழந்துள்ளதாகவும், நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் கண் பார்வைப் பிரச்சினைக்கு உட்பட்டுள்ளதாகவும் வைத்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.