ஓரிரு வாரத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ள ஐவர் ?

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் ஐவர் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவரும், பிரதி அமைச்சர்கள் இருவரும் ஒரு இராஜாங்க அமைச்சரும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், நான்கு கட்டங்களில் இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டும் வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளவர்கள் கடந்த காலங்களில் கூட்டு எதிர்க் கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஒன்றிணைக்க கடுமையாக உழைத்தவர்கள் எனவும், அந்த முயற்சி தோல்வியடைந்ததனாலேயே அவர்கள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அறிவித்துள்ளார்.