பெற்றோலுடன் மண்ணெண்ணெயை கலந்து மோசடி!

பெற்றோலுடன் மண்ணெண்ணெயை கலந்து விற்பனை செய்யப்படும் சட்டவிரோத வர்த்தகம் ஒன்றை காவற்துறை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வெல – தேவஹுவ – மகுலகஸ்வெவ பகுதியில் பெற்றோலுடன் மண்ணெண்ணெயை கலப்படம் செய்துக் கொண்டிருந்த இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

எண்ணெய் தாங்கி பாரவூர்தி ஒன்றில் வைத்து இந்த கலப்படம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியின் சாரதியும், மண்ணெண்ணெயை கொணர்ந்த பாரவூர்தி ஒன்றின் சாரதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் நீண்டகாலமாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த எண்ணெய் தாங்கி பாரவூர்தி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.அப்துல்லா மஹருஃபிற்கு உரியது என்று தெரியவந்துள்ளது.

எனினும் இந்த சம்பவத்துக்கும் தமக்கு தொடர்பில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவற்துறையிடம் தெரிவித்துள்ளார்.