நியுசிலாந்து நோக்கி பயணித்த நான்கு அகதிகள் படகுகள் இடைமறிப்பு

நியுசிலாந்து நோக்கி பயணித்த அகதிகளின் படகு நான்கினை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நியுசிலாந்தின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

குறித்த படகுகளில் 164 அகதிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.