தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணி!!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணியொன்றை ஸ்தாபிக்க, நடவடிக்கை எடுத்துவருவதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின் பின்னரே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு, அரசியல் இலாபம் கருதி செயற்படுவதால், மக்கள் சிரமங்களுக்குள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக புதிய அணியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், கூட்டமைப்பிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்த்து ஏனைய கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.