உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் கிளிநொச்சி, யாழ்ப்­பா­ணத்­தில் ஐ.தே.க. தனித்­துப் போட்டி

எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்தே போட்­டி­யி­ட­வுள்­ளது.

மன்­னார், முல்­லைத்­தீவு, வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளில் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னின் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யிட உள்­ளது.

இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்ற இத­னைத் தெரி­வித்­தார்.

ஜன­வரி மாத இறு­திப் பகு­தி­யில் உள்­ளு­ராட்­சித் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில் கட்­சி­கள் அதற்­குத் தயா­ராகி வரு­கின்­றன. புதிய தேர்­தல் கூட்­ட­ணி­கள் உரு­வா­கின்­றன.

இது­வ­ரை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, கஜேந்­தி­ர­கு­மார் – சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் கூட்­டணி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆகி­யன தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யி­ருக்­கின்­றது.

“ஐக்­கிய தேசி­யக் கட்சி வடக்­கில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் போட்­டி­யி­டும். யாழ்ப்­பா­ணம் மற்­றும் கிளி­நொச்­சி­யில் மட்­டும் தனித்­துப் போட்­டி­யி­டும். மற்­றைய மாவட்­டங்­க­ளில் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் சேர்ந்து போட்­டி­யி­டும்” என்­றார் இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்.