காணிப்பிரச்சினை தீருமா? வடக்கு ஆளுநருடன் பேச்சு

முல்லைத்தீவு மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான முக்கிய சந்திப்பொன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெறும் இச் சந்திப்பில், இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கிராம அலுவலர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதோடு, இவர்களது காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை விடுவிக்குமாறு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு, ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம் கடிதங்களும் கையளித்துள்ளனர்.

அவ்வாறு ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட காணிப்பிரச்சினை தொடர்பான கடிதங்கள் குறித்து, இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டு வருகின்றது.