உச்­சக்­கட்ட ஜன­நா­ய­கம் உள்ள கட்சி தமி­ழ­ர­சுக்­கட்சி – சிறி­த­ரன் எம். பி.

உச்­சக்­கட்ட ஜன­நா­ய­கம் உள்ள கட்சி தமி­ழ­ர­சுக்­கட்சி – சிறி­த­ரன் எம். பி.

தமிழ் தேசி­யக் கூட்­டமைப் பில் உச்­சக்­கட்ட ஜன­நா­ய­கம் உள்ள கட்­சி­யாக தமி­ழ­ர­சுக்­கட்சி காணப்­ப­டு­கின்­றது என யாழப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி. சிறி­த­ரன் தெரி­வித்­தார்.

வவு­னி­யா­வில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் மத்­திய குழு கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­தன் பின்­னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும் போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இன்­றைய கூட்­டத்­தில் அர­ச­மைப்­புத் தொடர்­பான விட­யங்­களே கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. இடைக்­கால அறிக்கை தற்­போது வெளி­வந்­துள்ள நிலை­யில் அதன் பிர­கா­ரம் வர இருக்­கின்ற இறுதி வரை­பில் சேர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்­கள் தொடர்­பா­க­வும் ஆரா­யப்­பட்­டது.

அதில் அர­ச­மைப்­புத் தொடர்­பாக மக்­க­ளைக் குழப்­பாது இறுதி வரைபு வெளி­வந்­த­தும் விளக்­கங்­கள் வழங்­கு­வ­தென முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

உள்ளூ­ராட்சி மன்றத் தேர்­தல் தொடர்­பா­க­வும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. தமி­ழ­ர­சுக் கட்சி அத­னோடு இணைந்­தி­ருக்கக்கூடிய பங்­கா­ளிக் கட்­சி­கள் இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்­பான ஆலோ­ச­னை­க­ளை­யும் மத்­தி­ய­குழு உறுப்­பி­னர்­கள் முன் வைத்­துள்­ள­னர்.

இதே­வேளை கிழக்கு மாகா­ணத்­தி­லும் வடக்­கில் பல்­லின மக்­கள் வாழக்­கூ­டிய இடங்­க­ளில் உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­த­லில் எதிர்­கொள்ள வேண்­டிய சவால்­கள் தொடர்­பா­க­வும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தன.

அத்­து­டன் கூட்­டாக எவ்­வாறு இந்தத் தேர்­த­லில் மாற்­றத்­தினை கொண்டு வரு­வது என்­பது தொடர்­பா­க­வும் ஆரா­யப்­பட்­டது –என்­றார்.

இதன்­போது ஊட­க­வி­ய­லார்­க­ளால், ‘‘கூட்­ட­மைப்­புக்­குள் ஒற்­றுமை நிலைக்­குமா?’’ என கேட்­கப்­பட்­டது.

‘‘தமி­ழ­ர­சுக்­கட்சி ஒற்­று­மைக்­கா­கவே கூடு­த­லான பங்­க­ளிப்பை வழங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. நாங்­கள் ஒற்­று­மையை விரும்­பு­வ­த­னால் தான் எங்­கள் கட்சி தொடர்­பா­க­வும், எங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் பலர் விமர்­ச­னத்­தினை முன் வைக்­கின்றபோதும் தமிழ் மக்­க­ளின் நல் வாழ்­வுக்­காக நாம் கூடி­ய­ளவு மௌனத்­தினை வழங்கி ஒற்­று­மைக்­காகத் தியா­கம் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றோம். அந்தத் தியா­கம் வீண்போகாது.’’ என்­றார்.

ஜன­நா­யக தமி­ழ­ர­சுக்­கட்சி உரு­வா­கி­யுள்­ளது தொடர்­பாகக் கேட்­ட­போது,

இலங்­கை­யில் எல்­லோ­ருக்­கும் ஜன­நா­யக உரிமை இருக்­கின்­றது. ஆகவே அதில் உள்ள உச்­ச­மான ஜன­நா­ய­கத்­தினை பயன்­ப­டுத்திப் பல­பேர் இவ்­வாறு கட்­சி­களைத் தொடங்­க­லாம். தேர்­த­லில் நிற்­க­லாம். மக்­கள் அதற்கு விடை­ய­ளிப்­பார்­கள்–என்­றார்.