எரிபொருள் பிரச்சினைக்கான காரணம் என்ன? ஜனாதிபதியிடம் அறிக்கை!

இலங்கையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில், எரிபொருள் நெருக்கடிக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாக உபகுழுவில் அங்கம் வகித்த அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட திடீர் எரிபொருள் தட்டுப்பாட்டினால், மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததோடு, அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையில், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் உள்ளடங்கலான அமைச்சரவை உபகுழுவை கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.