குடாநாட்டில் தொடர்மழையால் வயல்கள் அழிவு

குடாநாட்டில் தொடர்மழையால் வயல்கள் அழிவு

யாழ்ப்பாணம் குடாநாட்டில் விவசாயிகள் மழைக்காலத்தில் அழிந்து போன நெற்பயிர்க ளுக்கு மாற்றாக மீண்டும் நெல் நாற்றுக்களை நடுகை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் மழை வெள்ளத்தினால் தாழ்ந்த வயல்களில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில் நெற்பயிர்கள் வெள்ளம் மூடி முழுமையாக அழிந்துள்ளன. இந்த அழிவால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த ஆண்டில் பெரும்போக நெற்செய்கையின் போது போதிய மழை வீழ்ச்சி இன்மையால் நெற்பயிர்கள் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டு செய்கையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் மழை தொடர்ந்து பெய்ததால் வயல்களில் வெள்ளம் ஏற்பட்டு பயிரழிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாற்றாக நெல் நாற்றுக்களை நடுகை செய்வதால் நெல் நாற்றுக்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர்.