கிளிநொச்சியில் இறப்பர் பயிர்ச்செய்கைகள் ஆரம்பம்!

கிளிநொச்சி மலயாளபுரம் பிரதேசப்பகுதியில் 10 விவசாயிகளால் இறப்பர் மரக்கன்றுகளை பயிரிடும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டமானது இறப்பர் பயிர்செய்கைக்கு பொருத்தமானதாக பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து அங்கு தற்போது இறப்பர் பயிற்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு மாணிய அடிப்படையில் விசவாயிகளுக்கு இறப்பர் கன்றுகளும், பராமரிப்பு செலவுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அடுத்த 5 வருடங்களில் இந்த இறப்பர் மரங்கள் பலன் கொடுக்க ஆரம்பித்துவிடும் என தெரிவிக்கப்படுவதோடு, குறித்த பகுதியில் அதிகளவு இறப்பரை பயிரிடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.