நாடு முழுவதும் வியாழனன்று முக்கிய சேதனை

நாடு முழுவதும் வியாழனன்று முக்கிய சேதனை

நடு­வண் சுகா­தார அமைச்­சின் டெங்­குக் கட்­டுப்­பாட்­டுப் பிரி­வி­ ன­ரின் ஏற்­பாட்­டில் நாட­ளா­விய ரீதி­ யி­லான தேசிய டெங்­குக் கட்­டுப்­பாட்­டுச் செயற்­பா­டு­கள் நாளை­ம­று­தி­னம் வியா­ழக்­கி­ழ­மை­யும் மறு­நாள் வெள்­ளிக்­கி­ழ­மை­யும் நடை­பெ­ற­வுள்­ள­தென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் இந்த நாள்­க­ளில் கொடி­கா­மம் மற்­றும் கைத­டிப் பொது சுகா­தார பரி­சோ­த­கர் பிரி­வு­க­ளில் டெங்கு பரி­சோ­த­னை­க­ளில் ஈடு­ப­ட­வுள்­ள­னர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி 23ஆம் திகதி கொடி­கா­மம் பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­கர் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளி­லும் 24ஆம் திகதி கைதடி பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர் பிரி­ வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளி­லும் பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டும்.

மழை காலம் என்­ப­தால் டெங்கு நுளம்பு உற்­பத்­தி­யா­கக் கூடிய இடங்­க­ளைக் கண்­ட­றி­யும் பொருட்டு குடி­யி­ருப்­பு­கள், அரச தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் காணி­கள், ஆல­யங்­கள், புதிய கட்­டட நிர்­மாண இடங்­கள், அரச பாட­சா­லை­கள், தனி­யார் கல்வி நிறு­வ­னங்­கள், வணிக நிலை­யங்­கள் உள்­ளிட்ட இடங்­க­ளில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

என­வும் டெங்கு நுளம்பு உற்­பத்­தி­யா­கக்­கூ­டிய இடங்­கள் காணப்­ப­டின் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அல்­லது பரா­ம­ரிப்­பா­ளர்­கள் மீது வழக்­கு­கள் பதிவு செய்­யப்­ப­டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடி­யி­ருப்­பு­க­ளில் பூச்­சா­டி­கள், மழை நீர் சேக­ரிப்­புத் தொட்­டி­கள், கால்­ந­டை­க­ளுக்கு நீர் வைக்­கும் பாத்­தி­ரங்­கள், இள­நீர்க் கோம்­பை­கள் உட்­பட நீர் ஏந்து பொருள்­கள் காணப்­ப­டின் அவற்­றை உரி­ய­வாறு அப்­பு­றப்­ப­டுத்தி பரி­சோ­த­னைக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வாரம் தென்­ம­ராட்சிப் பிர­தே­சத்­தின் வரணி மட்­டு­வில் ஆகிய பொது சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் பிரி­வு­க­ளில் நடத்­தப்­பட்ட டெங்­குப் பரி­சோ­த­னை­க­ளில் 30 பேருக்கு எதி­ராக வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத் தக்கது.