சு.க. எம்பிக்களின் பதவிகள் பறிபோகும் ஆபத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டு ஏனைய கட்சிகளுக்கு சார்பாக செயற்படுபவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிக்கப்படுமென, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கட்சி யாப்பின் பிரகாரம் வேறு கட்சிகளுக்காக இவ்வாறு பிரசாரம் செய்வது சட்டவிரோதமானதென குறிப்பிட்ட அமைச்சர், இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரக் கட்சியின் இருந்துகொண்டு வேறு கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறுவதனாது, சுதந்திரக் கட்சியை இல்லாமல் செய்யும் நடவடிக்கை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, எந்த பதவி நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்.

இதெவேளை, சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மஹிந்த, சகல மட்டத்திலும் கலந்துரையாடி அதன் பின்னர் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படுமென மேலும் குறிப்பிட்டார்.