இலங்கை தமிழ் அரசு கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியது

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று நணபகல் செலுத்தியுள்ளது.

அந்தக் கட்சியன் சாவகச்சேரி அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான கேசவன் சயந்தன், கட்சியின் மூத்த உறுப்பினர் அருந்தவபாலன் மற்றும் சுகிர்தன் இந்தக் கட்டுப்பணத்தை யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ‘வீடு’ சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிடுவதில்லை என ரெலோ அறிவித்துள்ளது.

தற்போது அந்தச் சின்னத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் போட்டியிடுவதாக புளொட் மட்டுமே உள்ளது. எனினும் புளொட்டின் உறுதியான முடிவை அறிய முடியவில்லை...