முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!

முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது.

புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.