தலைவர் பதவியிலிருந்து விமல் விலகவேண்டும்!

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யா­னது வீழ்ச்­சியை நோக்­கிப் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. கட்­சியை மீட்­டெ­டுக்க வேண்­டு­மா­னால் தலை­மைப் பொறுப்­பி­லி­ருந்து விமல் வீர­வன்ச வில­க­வேண்­டும்.

இவ்­வாறு தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தேசிய அமைப்­பா­ளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ள பிய­சிறி விஜே­நா­யக்க தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தேசிய அமைப்­பா­ளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளேன் என்று கட்­சி­யால் அறி­விக்­கப்­பட்­டது. இதை என்­னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. உரிய நடை­மு­றையைப் பின்­பற்றி என்­னைப் பதவி நீக்­கம் செய்­ய­வில்லை. இது தொடர்­பில் தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ருக்கு அறி­வித்­துள்­ளேன்.

நில­மை­யைத் தெளி­வு ­ப­டுத்தித் தேர்­தல் ஆணை­யா­ளர் ஊடாகக் கட்­சித் தலை­வ­ருக்குக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளேன். அதே­வேளை, தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யா­னது இன்று வீழ்ச்­சிப் பாதை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது.

நெருக்­க­டி­யில் இருந்து கட்­சியை மீட்­டெ­டுக்க வேண்­டு­மா­னால் தலை­வர் பத­வியை விமல் வீர­வன்ச துறக்­க­வேண்­டும் என்­றார்.