அழுகிய நிலையில் மரக்கறிகள் கைப்பற்றப்பட்டது

அழுகிய நிலையில் மரக்கறிகள் கைப்பற்றப்பட்டது

மட்டக்களப்பு சித்தாண்டி வாரந்த சந்தையில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த ஒரு தொகுதி மரக்கறிகளை இன்று கைப்பற்றியுள்ளதாக சித்தாண்டி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் சி.சிவகாந்தன் தெரிவித்தார்.

பாவனையாளர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து வாரந்த சந்தை நடைபெறும் பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்போது அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கோவா 30 கிலோகிராம், கரட் 50 கிலோகிராம், கத்தரிக்காய் 15 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மரக்கறிகளை நாளை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.