ஐ.ம.சு. முன்னணியின் பங்காளிகள் உள்ளூராட்சியில் தனித்துப் போட்டி!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அர­சி­யற் கட்­சி­கள் தனித்­த­னி­யாக எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குச் சந்­தர்ப்­பம் வழங்­கு­மாறு பொது­மக்­கள் ஐக்­கிய முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஸ் குண­வர்­தன விடுத்த கோரிக்­கைக்கு, முன்­ன­ணி­யில் அங்­கம் வகிக்­கும் பங்­கா­ளி­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நிறை­வேற்­றுச் சபை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் ஒன்­று­ கூ­டி­யது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, பொது­மக்­கள் ஐக்­கிய முன்­னணி, சிறி­லங்கா மக்­கள் கட்சி, தேச விடு­தலை மக்­கள் கட்சி, தேசிய காங்­கி­ரஸ், ஜன­நா­யக ஐக்­கிய தேசிய முன்­னணி, இலங்கை தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் உள்­ளிட்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யில் அங்­கம் வகிக்­கும் அர­சி­யற் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் பிர­தி­நி­தி­க­ளும் இதன்­போது ஒன்­று ­கூ­டி­னர்.

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்­யும் சகல கட்­சி­க­ளும் விரி­வா­ன­தொரு கூட்­ட­ணி­யா­கச் செயற்­பட வேண்­டு­மென ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் அமைச்­சர் மகிந்த அம­ர­வீர குறிப்­பிட்­டார்.

இலங்­கைத் தொழி­ லா­ளர் காங்­கி­ரஸைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆறு ­மு­கம் தொண்­ட­மான் மற்­றும் தேசிய காங்­கி­ரஸை பிர­தி­நி­தித்­து­வம் செய்­யும் ஏ.எல்.எம்.அதா­வுல்லா ஆகி­யோர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லில் போட்­டி­யிட இணக்­கம் தெரி­வித்­த­னர்.

இதன்­போது கருத்து தெரி­வித்த அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஏனை­யோ­ரின் தன்­மா­னத்­துக்குப் பங்­கம் விளை­விக்­காது வன்­மு­றை­க­ளற்ற, சுதந்­தி­ர­மா­ன­தும் அமை­தி­யா­ன­து­மான தேர்­தலை உறுதி செய்­வ­தற்கு சக­ல­ரும் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­னார்.

இந்­தத் தேர்­தல் வெற்­றி­யா­னது தேர்­தல் வேட்­பா­ளர்­கள் மீதே தங்­கி­யுள்­ளது என்­ப­த­னால் கூட்­ட­ணி­யின் சகல கட்­சி­க­ளும் நேர்­மை­யான அர­சி­யற் கொள்­கை­களை உடைய வேட்­பா­ளர்­களைத் தமது கட்சி சார்­பாகத் தேர்­த­லில் முன்­னி­றுத்த வேண்­டி­ய­தன் அவ­சி­யம் குறித்­தும் அரச தலை­வர் சுட்­டிக் காட்­டி­னார்.