வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் அபாயம்

வடமேற்கு வங்காளவிரிகுடாவின் கடற்பரப்பில் நிலவும் தாழமுக்க நிலைமை காரணமாக இலங்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவது தொடர்ந்தும் அபாயகரமானது.

ஆனால், ஏனைய கடற்பரப்புகளில் கடற்றொழிலில் ஈடுபடலாம் என்று காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.