க.பொ.த.சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான விசேட அறிவித்தல்

புதிய மற்றும் பழைய பரிந்துரைகளின் கீழ் 2017.12.12 திகதி முதல் 2017.12.21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை, காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சாத்திகளும் அனுமதி பத்திரத்துடன் உரிய பரீட்சை நிலைங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அனுமதி பத்திரத்துடன், தேசிய அடையாள அட்டை அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய கடவுச்சீட்டு கட்டாயம் கொண்வர வேண்டும்.

பரீட்சைக்கு முன்னர் அனுமதி பத்திரத்தில் தாம் கோரியுள்ள பாடங்கள், மொழி மற்றும் கையொப்பம் இடுதல் ஆகியவற்றை நன்கு பரிசீலிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது மாற்றம் இருந்தால் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தால் கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் பரீட்சாத்திகள், ஸ்மார்ட் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி மற்றும் மின்சார உபகாரணங்கள் ஊடாக பரீட்சை மோசடி செய்கின்றனரா என விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மோசடி செய்பவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகளில் கலந்து கொள்ள 5 வருடங்கள் தடை விதிக்கப்படுவதுடன், பரீட்சைகள் தொடர்பான பேறுபேறுகளும் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பரீட்சைகள் இடம்பெறும் போது தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அல்லது காவல்துறை தலைமையகத்திற்கு அறிவிப்பதற்கான ஆலோசனைகள், பரீட்சை நிலைய பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் பரீட்சைகள் நிலையத்தினுள் அனுமதியற்ற எந்தவொரு நபரும் நுழைய முடியாததுடன், அந்த பாடசாலையினுள் நிர்மாண பணிகள், மேலதிக வகுப்புக்கள், விளையாட்டு விழா தொடர்பான கூட்டங்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிலையங்களில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் கீழே உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்

பரீட்சைகள் திணைக்களம் - 1911

பாடசாலை பரீட்சை அமைப்பு சபை - 0112784208 / 0112784537 / 0113188350 / 0113140314

காவல்துறை தலைமையகம் - 0112421111

அவசர தொலைபேசி இலக்கம் - - 119