யாழ்.மாநகரசபை மேயர் வேட்பாளர் யார்?

யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சிரிப்பையே பதிலாக கொடுத்தார்.

யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான இ.ஆர்னோல்ட் மற்றும் ஜெயசேகரம் , மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியருமான என். வித்தியாதரன், மற்றும் சொலமன் சிறில் ஆகிய நால்வர் போட்டியிட உள்ளதாகவும் , அதில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் இழுபறி ஏற்பட்டு உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே சுமந்திரன் சிரித்துக்கொண்டு அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார்,