யாழில் அறுவர் கைது

யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுக் குழுவைச்சேர்ந்த 6பேர் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மதியம் வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வன்முறையை தூண்டும் வகையில செயற்பட்டுள்ளமையானது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 22 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மல்லாக நீதிமன்ற நீதிபதி ஏ.யுட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.