இலங்கையின் கிறிஸ்மஸ் மரத்திற்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம்

இலங்கையில் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான செயற்கை கிறிஸ்மஸ் மரம் என்ற சாதனைக்காக கடந்த ஆண்டு இலங்கையில் கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த சாதனையை அங்கீகரித்துள்ள கின்னஸ் உலக சாதனை குழுவினர், அதற்கான சான்றிதழ்களை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளனர்.

72.1 மீற்றர் உயரமான செயற்கை கிறிஸ்மஸ் மரமொன்று கடந்த ஆண்டு காலி முகத்திடலில் உருவாக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக உலகின் மிக உயரமான செயற்கை கிறிஸ்மஸ் மரம் என்ற சாதனை 55 மீற்றர் உயரமான மரமொன்று சீனாவில் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்படுவதற்கு கத்தோலிக்கச் சபையினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.