பெண் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் கைது

ஆணமடுவ – லபுகல பிரதேசத்தில் புதையல் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிலத்தை அகழ்ந்துக்கொண்டிருந்த பெண் உள்ளிட்ட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22,23,24,27,31,35 மற்றும் 38 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.