புர்­கா­வுக்­குத் தடை­யில்லை தேர்­தல்­கள் திணைக்­க­ளம் அறி­விப்பு!

தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்கு முழு­மை­யாக முகத்தை மறைக்­கும் புர்­கா­வுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டும் குற்­றச்­சாட்டை தேர்­தல் திணைக்­க­ளம் நிரா­க­ரித்­துள்­ளது.

வாக்­க­ளிப்­ப­தற்கு முன்­ன­தாக வாக்­க­ளிப்பு நிலைய பெண் அதி­கா­ரிக்கு தனது அடை­யா­ளத்தை உறுதி செய்­வ­தற்கு மாத்­தி­ரம் முகத்தை காண்­பித்­தால் போதும் என்று தேர்­தல்­கள் திணைக்­க­ளம் குறிப்­பிட் டுள்­ளது.

வாக்­க­ளிக்­கும் போது கடைப்­பி­டிக்க வேண்­டிய முறை­கள் தொடர்­பில் தேர்­தல் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்ள விட­யங்­களை சிலர் தவ­றாக பரப்­புரை செய்­கின்­ற­னர். வாக்­க­ளிப்­ப­தற்கு கருப்­புக் கண்­ணாடி அணிந்து வர­வும் தலைக்­க­வ­சம் அணிந்­து­வ­ர­வும் தடை­வி­திக்­கப் பட்­டுள்­ளது. அதனை மீறு­வோர் வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வார்­கள்.

வானூர்தி நிலை­யத்­தில் அடை­யா­ளத்தை உறுதி செய்ய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­ரி­க­ளுக்கு முகத்தை காண்­பிப்­பது கட்­டா­யம். அதே போன்று அடை­யாள அட்டை பெற­வும் முகத்தை காண்­பிக்க வேண்­டும். இதே போன்று தான் வாக்­க­ளிப்­பின் போதும் புர்கா அணிந்­துள்ள பெண்­கள் முகத்தை காண்­பிக்க வேண்­டும்.

இந்த விதியை சிலர் இன­வாத ரீதி­யில் சித்தி­ரித்து தேர்­த­லில் புர்க்­கா­வுக்கு தடை என்று காண்­பிக்க முயல்­வ­தாக தேர்­தல்­கள் திணைக்­க­ளம் குற்­றம் சுமத்­தி­யுள்­ளது.