நடமாடும் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

நடமாடும் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நடாத்திச்செல்லப்பட்ட நடமாடும் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , இதன் போது குறித்த இடத்தின் முகாமையாளர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 28 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நுகேகொடை மற்றும் மஹரகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த முகாமையாளர் , யுவதிகள் இருவருடன் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வாகனமொன்றில் இருந்து , கிடைக்கும் தொலைப்பேசி அழைப்புக்களுக்கு அமைய பெண்களை பெற்றுக்கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், வாடிக்கையாளர் ஒருவராக இருப்பின் , குறித்த வாகனத்தில் விபச்சாரத்தில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுவதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.